Tuesday, 8 January 2019

விஸ்வாசம் திரைப்படத்திற்காக "12" வருடத்திற்கு பின் தல அஜித் செய்துள்ள காரியம்


பொங்கல் ஸ்பெஷலாக வருகிற ஜனவரி 10ம் தேதி நடிகர் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், இத்திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் நடிகர் அஜித் எடுத்திருக்கும் அவதாரம் குறித்து பேசி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் வெற்றி.

அவர் அளித்துள்ள பேட்டியில், வழக்கமான நடிகர் அஜித்தின் படங்கள் போல அல்லாது குடும்ப ரசிகர்களையும் குழந்தைகளையும் கவரும் விதத்தில் விஸ்வாசம் திரைப்படம் உருவாகியுள்ளது.


வீரம், வேதாளம், விவேகம், ஆகிய திரைப்படங்களில் முழுக்க முழுக்க சீரியஸான ரோலில் அஜித் நடித்திருந்தார். ஆனால் விஸ்வாசத்தில் நடிகர் அஜித்தை ஒரு என்டர்டெயினராக காண முடியும்.

இப்படியொரு ரோலில் அவர் நடித்து கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு  மேல் ஆகிவிட்டது. அதனால் கண்டிப்பாக தூக்குத்தூரை கதாப்பாத்திரம் ரசிகர்களை கவரும்' எனக்கூறி ரசிகர்கள் மட்டும் அல்லாது பிறரது ஆர்வத்தையும் தூண்டி இருக்கிறார்.

தொடர்புடைய செய்தி 

விஸ்வாசம் பார்த்த பின் அஜித்தின் ரியாக்சன்..! சிவா வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்


Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();