Tuesday, 8 January 2019

"வீட்டிற்கு அழைத்து என்னை கற்பழித்தார்" தயாரிப்பாளர் மீது இளம் நடிகை புகார்


"மீட்டூ" எனும் ஒரு விஷயம் விஸ்பரூபம் எடுத்து, திரைத்துறையின் பாலியல் குற்றவாளிகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தாலும், அக்குற்றங்கள் குறைந்த பாடில்லை.

பல பிரபலங்களின் உண்மை முகம் வெளி வந்து கொண்டிருக்கும் இப்படியொரு சமயத்திலும் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி இருக்கிறார் பிரபல மலையாள திரைப்பட இயக்குனரான வைசாக் ராஜன்.

வைசாக் ராஜன், பத்மஸ்ரீ டாக்டர் சரோஜ் குமார், வெல்கம் டு சென்ட்ரல் ஜெயில், சங்க்ஸ், ரோல்மாடல்ஸ் போன்ற பிரபல திரைப்படங்களை தயாரித்தவர்.


இவர் மீது வளர்ந்து வரும் மாடல் நடிகை ஒருவர், எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில், 'பாலியல் ரீதியில் தவறாக நடந்து கொண்டதாக' புகார் அளித்துள்ளார்.  

அதன் படி, தனது புதிய திரைப்படத்தில் வாய்ப்பு தருவதாகவும் கதை பற்றி பேச வேண்டும் எனவும் கூறி நடிகையை தனது வீட்டிற்கு அழைத்த வைசாக் ராஜன், பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

அவரிடம் இருந்து தப்பி வந்த நடிகை, அருகில் இருந்த காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து, வைசாக் ராஜன் மீது புகார் அளித்திருக்கிறார்.  இதனால்  எர்ணாகுளம் போலீசார், அவர் மீது செக்சன் 376ன் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி 

"அவன் உன்ன ஏமாத்திடுவான்" இளம் நடிகைக்கு எச்சரிக்கை விடுக்கும் கோலிவுட்
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();