Breaking News

விடிய விடிய குடி...! நாசமாய் போகும் முன்னணி நடிகர்...!


திரையுலகில் மது, மாது பிரச்சனைகளால் சீரழிந்த நடிக நடிகைகள் ஏராளம். அவர்கள் வரிசையில் இணைய காத்திருக்கிறாராம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவர்.

தமிழ் சினிமாவில் இன்றைய தேதிக்கும் மிகப்பெரும் ரசிக செல்வாக்கு கொண்ட நடிகர்களில் ஒருவர் தான், இப்படி போதைக்கு அடிமையாகி, குடும்ப உறுப்பினர்களுக்கு மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறாராம்.

அவர் சொன்னால் உயிரை கூட விடும் அளவிற்கு ரசிகர்கள் அன்பு வைத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட செல்வாக்கு மிக்க இந்த நடிகர், ஷூட்டிங் முடிந்ததும் ஆரம்பிக்கும் சரக்கு பார்ட்டியை முடித்துக் கொள்ள அதிகாலை 3 மணி வரை ஆகிறது என்கிறார்கள் திரையுலகினர்.

ஏற்கனவே குடியால், சாதிக்க வேண்டிய வயதில் நோய்வாய்ப்பட்டு பிரபலங்கள் உயிரிழந்த சம்பவங்கள், திரைத்துறையை ஆட்டிப் படைக்கும் நிலையில், 'தனது செல்வாக்கிற்கு எங்கேயோ இருக்க வேண்டியவர் இப்படி குடியை விட மறுக்கிறார்'என மனம் வருந்துகிறார்களாம் கோடம்பாக்கத்தினர்.