Breaking News

என்னது 'விஸ்வாசம்' சுட்ட கதையா..? சொல்லவே இல்ல...!


அஜித் சிவா கூட்டணியில் நான்காவது திரைப்படமாக விஸ்வாசம் உருவாகியுள்ளது. கடந்த 10-ம் தேதி வெளியான இந்த திரைப்படம் முதல் நாள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி படமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும் இத்திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் நாளில் அதிக வசூல் புரிந்ததாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது. இதெல்லாம் ஒரு புறம் இருக்க,

"அடப்பாவிகளா தெலுங்கு திரைப்படத்தை அப்படியே எடுத்து வச்சிருக்கீங்களேடா" என தமிழ் சினிமாவின் சுட்ட பாடல்களையும், திரைக்கதைகளையும் துப்பு துலக்கும் 'ஸ்பை'களே அதிர்ச்சியடைந்து இருக்கிறார்கள்.  

அவர்கள் துப்பு துலக்கியதன் படி விஸ்வாசம், தெலுங்கில் கடந்த 2007ம் ஆண்டு, நடிகர் வெங்கடேஷ், நயன்தாரா (அதுலையுமா?) நடிப்பில் வெளியான 'துளசி' எனும் திரைப்படத்தின் ஈ அடிச்சான் காப்பி என தெரியவந்துள்ளது.


அந்த திரைப்படத்திலும், கணவனின் அடிதடி குணம் பிடிக்காமல் மனைவி விட்டு செல்ல, தான்தான் தந்தை என்று தெரியாத குழந்தையிடம் ஹீரோ நட்பை வளர்க்கிறார்.


ஆங்காங்கே ஒரு சில பட்டி டிங்கரிங் வேலைகள் உட்பட, இந்த இரண்டு படங்களுக்கும் பெரிய வித்யாசமே, அங்கு பையன் செண்டிமெண்ட், இங்கு மகள் செண்டிமெண்ட்.