Tuesday, 8 January 2019

விஸ்வாசம் பார்க்க மறுத்த நயன்தாரா..! நெகிழ வைக்கும் காரணம்


விஸ்வாசம் திரைப்படத்தின் பிரிவியூ காட்சிக்கு நடிகை நயன்தாரா ஆப்சென்ட் ஆகி இருக்கிறார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் அஜித், நயன்தாரா, தம்பி ராமையா, யோகிபாபு என மாபெரும் நட்சத்திர பட்டாளத்துடன் பொங்கலுக்கு வெளிவர இருக்கும் திரைப்படம் விஸ்வாசம்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பிரிவியூ காட்சிகள் சினிமா பிரபலங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு காட்டப்பட்டது.

அஜித்தின் மனைவி ஷாலினி உட்பட பல்வேறு சினிமா பிரபலங்கள் கண்டுகளித்த இந்த பிரிவியூ காட்சிக்கு, கதையின் நாயகி நயன்தாராவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.  


ஆனால் அவரோ அக்காட்சியினை தவிர்த்து விட்ட நிலையில், விஸ்வாசம் திரைப்படத்தினை, முதல் நாள் முதல் காட்சியாக  ரசிகர்களோடு தியேட்டரில் பார்க்கவே விரும்புவதாக கூறி படக்குழு மட்டுமல்லாது ரசிகர்களையும் நெகிழவைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி 

விஸ்வாசம் பார்த்த பின் அஜித்தின் ரியாக்சன்..! சிவா வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்


Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();