Breaking News

'ஆளப்போகும் தமிழன்' மகனுக்கு தமிழ் தெரியாதா..? விஜய் மகனை விமர்சிக்கும் நெட்டிசன்கள்


நடிகர் விஜய் 'ஆளப்போறன் தமிழன்' என மெர்சல் பாடலின் மூலம் தமிழ் மக்களை புல்லரிக்க செய்தவர். தமிழகத்தின் சமூக பிரச்சனைகளுக்கு அரசியல்வாதிகளே குரல்கொடுக்காத போதும், தன் குரலை மக்களுக்காக பலமுறை உயர்த்தியவர் அவர். 

இதனால், ரஜினி, கமல் போல விஜயும் அரசியலுக்கு வருவார் தமிழகத்தை ஆளுவார் என அவரது ரசிகர் பட்டாளமும் காத்துக் கொண்டிருக்கிறது.

இப்படி தமிழன் எனும் ஒரு வார்த்தையை முன்னிறுத்தி மெர்சல் திரைப்படத்திலும் பல்வேறு திரைப்படங்களிலும் மக்களின் கைதட்டல்களை அள்ளியவர் விஜய்.

இவர் இப்படி இருக்க அவரது மகன் சஞ்சய், சமீபத்தில் வெளியான, தான் இயக்கி நடித்த குறும்படத்திலும், இயக்குனர் ஆனந்த் ஷங்கர் உடனான நேர்காணலிலும் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பேசி இருந்தது, விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது.

நிகழ்ச்சி தொகுப்பாளரான நடிகர் விஜயின் மகன் - வைரலாகும் வீடியோ 

விஜய் ரசிகர்கள் உட்பட அவரை தமிழில் பேச சொல்லி கருத்து தெரிவித்து வரும் நிலையில், 'நீங்க பேசியது ஒன்றும் புரியவில்லை இருந்தாலும் சூப்பர்' என ஆதரவும் அளித்து வருகின்றனர் ஒரு தரப்பினர்.