Wednesday, 16 January 2019

'தந்தை வயது' நடிகருடன் ரொமான்ஸ் செய்ய துடிக்கும் துடிக்கும் 'கீர்த்தி சுரேஷ்'


ஓரளவு வயதான நடிகர்களுடன் நடிக்கவே முன்னணி நாயகிகள் தயக்கம் காட்டி வரும் நிலையில், தன் தந்தை வயது நடிகருடன் ஜோடி சேர துடிக்கிறாராம் நடிகை கீர்த்தி சுரேஷ்.

விஜய், விக்ரம், சூர்யா என தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்து, குறுகிய காலத்திலேயே உச்ச நடிகை ஆகிவிட்டார் கீர்த்தி சுரேஷ்.

இவருக்கு இன்னும் 'அஜித் மற்றும் ரஜினி படங்களில் நாயகியாக நடித்துவிடவேண்டும்' என்ற அடுத்தகட்ட நிறைவேறாத ஆசையும் உள்ளது.

இதனால் அவர்களின் புதிய படங்களில் ஒப்பந்தமாக கீர்த்தி சுரேஷ், முயற்சித்து வரும் நிலையில், முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் திரைப்படத்தில் அவரே நாயகியாக நடிக்க இருப்பதாக ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது.


என்னவென்று விசாரிக்கையில், குறிப்பிட்ட திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷை நாயகியாக்க, எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என தெரிவிக்கிறது முருகதாஸ் அவர்களது தரப்பு.

சர்கார் படப்பிடிப்பின் போது ரஜினிக்காக வைத்திருந்த வேறுகதைக்குதான், அவரை நாயகியாக தேர்வு செய்ததாக முருகதாஸ் தெரிவித்ததாகவும், ஆனால் அந்த கதையை ரஜினி நிராகரித்துவிட்டதால், குறிப்பிட்ட கதைக்கு ஏற்ற நாயகியை தேடிவருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.


என்றாலும் பரவி வரும் தகவல், விவரம் தெரியாமல் கீர்த்தி சுரேஷ் தனது நட்பு வட்டாரங்களிடம் தெரிவித்ததாக இருக்கலாம் என்றும் பேசப்பட்டு வருகிறது.
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();