Breaking News

மீண்டும் தேடிப்போய் சிக்கும் ரஜினி..? தப்பிப் பிழைக்குமா அடுத்த படம்...?


ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் திரைப்படத்தோடு வீண் பிடிவாதமாக கடந்த ஜனவரி 10ம் தேதி ரிலீஸ் ஆனது. இரு படங்களுமே பக்கா மாஸ் எனும் நிலையிலும், விஸ்வாசத்தின் கை ஓங்கி இருப்பது ரஜினியின் 27 வருட சாதனைகளை தகர்க்கும் ஒன்றாகிவிட்டது.

இதனால், பேட்ட வெற்றியில் ஒருபுறம் மகிழ்ச்சியில் இருந்தாலும், தலைவர் தரப்பில் அதிருப்தியும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய சூப்பர் ஸ்டார் நடிப்பு, பிரமாண்ட தயாரிப்பு நிறுவனம், அதற்கேற்ற வேற லெவல் விளம்பரங்கள் என வெயிட்டாக வந்தும், சிம்பிள் ஆக சிங்கிள் ஆக வந்த விஸ்வாசம் முன்னிலை பெற்றதே இந்த அதிருப்திக்கு காரணம்.


இது, 'இத்தனை வருடங்கள் சினிமாவை தனது ராஜ்யமாக வைத்திருந்த ரஜினி சறுக்கலை சந்தித்து இருக்கிறாரோ?' என்ற கேள்வியினை திரைத்துறையினரிடமும், ரசிகர்களிடமும் கிளப்பி இருக்கிறது.

விஜய்க்கு, விஜய் ரசிகர்கள் மட்டுமே ரசிகராக இருப்பார்கள். அஜித் திற்கு அஜித் ரசிகர்கள் மட்டுமே ரசிகராக இருப்பார்கள். ஆனால் ரஜினிக்கு மட்டுமே விஜய், அஜித், விக்ரம் என பிற நடிகர்களின் ரசிகர்களும் ரசிகராக இருப்பார்கள்.


இந்நிலை, ரஜினி vs அஜித் என்றாகும் போது பாதிக்கும் மேலான இளம் ரசிகர்களின் எண்ணிக்கையை ரஜினி தரப்பில் இருந்து குறைத்தது. மேலும் குடும்ப செண்டிமெண்ட் எனும் விஷயத்தால் அஜித்தின் விஸ்வாசம் நியூட்ரல் ஆடியன்ஸை தன் பக்கம் இழுத்து விட்டது.

இதுவே விஸ்வாசம் முன்னிலை வகிக்க காரணமாகவும் அமைந்துவிட்டது. ஒருவேளை பேட்ட தனியாக களம்கண்டிருந்தால் வரலாறு காணாத வசூலை பெற்றிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இப்படி தயாரிப்பு நிறுவனத்தின் வீண் பிடிவாதத்தால், விஸ்வாசத்துடன் வெளியாகி இப்படியொரு சர்ச்சைக்கும், அங்காளி பங்காளியாக இருந்த, அஜித் - ரஜினி ரசிகர்களின் பகைக்கும் காரணமாக அமைந்து விட்டது.

இதே தவறை ரஜினி தனது அடுத்த படத்திலும் செய்ய இருப்பதாக, அதன் தீபாவளி ரிலீஸ் பற்றிய அறிவிப்புக்கள் பேச வைத்துள்ளன. அதே தினத்தில் விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகும் 'தளபதி 63' படம் வெளியாக இருக்கிறது. 


ஒருவேளை ரஜினி மற்றும் விஜயின் இரண்டு படங்களும் ஒரே தினத்தில் வெளியானால், 'பேட்ட' சந்தித்த அதே பிரச்சனையை ரஜினி - முருகதாஸ் படமும் சந்திக்கும்.

ஏனென்றால், அத்திரைபடம் முழுக்க முழுக்க அரசியல் பேசும் ஒன்றாக உருவாக இருக்கிறது, விஜயின் படமோ,  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரும் 'கனா' போன்ற ஒரு விளையாட்டு திரைப்படமாக இருக்கிறது.

அரசியல் படங்களுக்கு ஃபேமிலி ஆடியன்ஸ் வரவேற்பு குறைவு எனும் பட்சத்தில், விஜயின் படம் பக்கம் அவர்கள் சாயவும் வாய்ப்பு உள்ளது. இது சிறிய பின்னடைவை தலைவர் படத்திற்கு கொடுக்கலாம் எனும் பட்சத்தில், ரஜினியின் திரைப்படம் தனித்து வருவதே சிறந்தது என்ற கருத்தானது சினிமா வட்டாரங்களில் முன்வைக்கப்பட்டு வருகிறது.