Friday, 4 January 2019

"நீங்கள் அரசியலுக்கு வந்தால் அவ்வளவுதான்" ரஜினிக்கு ஷாக் கொடுத்த ஜோதிடர்


நடிகர் ரஜினிகாந்த் எந்த அளவிற்கு ஆன்மிகத்தில் நம்பிக்கை உடையவர் என்பதை ஒட்டுமொத்த தமிழகமே அறியும். மேலும் தனது ஒவ்வொரு நடவடிக்கையையும் நல்ல நேரம் பார்த்து ஜோதிடர்களின் அறிவுரைப் படியே செய்து வருபவர் அவர்.

இப்படி இருக்க நீங்கள் அரசியலுக்கு வந்தால் சரிப்பட்டு வராது எனக்கூறி ரஜினியின் தலையில் குண்டை தூக்கிப் போட்டிருக்கிறார் பிரபல தென்தமிழக ஜோதிடர் ஒருவர்.

சமீபத்தில் குறிப்பிட்ட ஜோதிடரை சந்தித்த ரஜினிகாந்த், தனது அரசியல் பயணம் குறித்து வினவ, 'ஆன்மிக நாட்டம் உடையவரான நீங்கள் அரசியலில் ஜொலிக்க வாய்ப்பு இல்லை.

நீங்கள் சினிமாவில்இன்றுவரை முன்னணியில் நிலைக்க காரணமாக இருந்தது உங்களது மூத்த மக்களின் ஜாதகம் தான். உங்கள் ஆதரவோடு அவர் அரசியலில் களம்கண்டால் வெற்றி நிச்சயம்' எனக்கூற மிரண்ட போய் இருக்கிறாராம் சூப்பர் ஸ்டார்.
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();