Breaking News

'பேட்ட' கொடுத்த பிரமாண்ட லாபம்...! கொண்டாட்டத்தில் சன்பிக்சர்ஸ் நிறுவனம்

#Petta-collection-report

பேட்ட திரைப்படத்தின் விற்பனை குறித்த தகவல்கள் தற்பொழுது வெளிவந்துள்ளது.

சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்பாராஜ் இயக்க ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா என பிரபலங்கள் ஒன்றிணைந்து இருக்கும் திரைப்படம் 'பேட்ட'.

ஜனவரி 10 அன்று வெளியாக இருக்கும் இத்திரைப்படத்தின் தியேட்டரிக்கல் ரைட்ஸ் விற்பனை மற்றும் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் அடைந்த லாபம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

அதன்மூலம், பேட்ட திரைப்படம் சுமார் 160 கோடி மொத்த செலவில் எடுக்கப்பட்டு இருப்பதும், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னட திரையரங்க உரிமை மற்றும் டப்பிங் உரிமை, சாட்டிலைட் உரிமை, வெளிநாட்டு விநியோகம் என மொத்தம் 205 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகி இருப்பதும் தெரியவந்துள்ளது. 

ஆகமொத்தம் பேட்ட திரைப்படத்தினால் அதன் தயாரிப்பு நிறுவனம் சுமார் 45 கோடி லாபம் பார்த்து இருக்கிறது. என்றாலும் விற்பனை ஆன தொகையை லாபகரமாக 'பேட்ட' வசூல் செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

#Petta-prebusiness -report