Tuesday, 8 January 2019

ரஜினியை பங்கமாக கலாய்த்த கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்..! வைரலாகும் வீடியோ


நடிகர் ரஜினியின் அரசியல் முடிவுகள் குறித்து கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்  கிண்டல் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தை சுற்றிவருகிறது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்தவரான இவர், சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

அப்பொழுது அரசியலுக்கு வருவது குறித்து கேள்விகள் கேட்கப்பட, 'இந்தியாவில் நடிகர் ரஜினிகாந்த் போல அரசியலுக்கு வருவேனா, வரமாட்டேனா என்று சஸ்பென்ஸ் வைப்பவன் நான் அல்ல, எனக்கு அரசியலில் விருப்பம் இல்லை. அதனால் அங்கு என்னை எதிர்பார்க்க முடியாது' என கிண்டலாக பேசி இருந்தார்.

இப்படி கிரிக்கெட் வீரர் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கலாய்த்த வீடியோ இணைய உலகில் பிரபலமாகி வருகிறது. 

Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();