Breaking News

மதுரையை கலக்கிய தாதாவின் கதையே "பேட்ட" - வெளியான ரகசியம்


கார்த்திக் சுப்பாராஜின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன் என மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே தோன்றி இருக்கும் திரைப்படம் பேட்ட.

விஸ்வாசத்தோடு வருகிற ஜனவரி 10ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் இத்திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


இந்நிலையில் இத்திரைப்பட கதை குறித்த சுவாரஸ்யமான தகவல் கசிந்துள்ளது. அதன் படி பேட்ட திரைப்படத்தின் கதை, மதுரையை கலக்கிய 'நெல்பேட்டை சீனு' என்பவரை அடிப்படையாக கொண்டது என தெரியவந்துள்ளது.

குறிப்பிட்ட நபர், இன்றும் மதுரையை நடுங்க வைத்துக் கொண்டிருக்கும் தாதாக்களின் குரு எனவும், அவரின் குணநலன்களை அடிப்படையாக வைத்தே பேட்ட திரைப்படத்தில் ரஜினியின் கதாப்பாத்திரம் வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.


முன்னதாக கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில், மதுரை தாதாக்களை மையமாக வைத்து வெளியான ஜிகர்ந்தாண்டா திரைப்படம் பட்டையை கிளப்பி இருந்ததும்குறிப்பிடத்தக்கது.