Breaking News

விஜய் ரசிகர்களால் வாயடைத்து போன விவேக் - விழா மேடையில் நிகழ்ந்த சம்பவம்


திரளான சினிமா ரசிகர்கள் கூடிய நிகழ்ச்சிகளில் பெரும்பாலானோர், தல தளபதி ரசிகர்களாகத்தான் இருப்பார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.  அவர்களின் கரகோசத்தை பெற தல அல்லது தளபதி என்ற சொல்லே போதுமானது.

அந்த ஒரு சொல்லுக்கே அரங்கம் அதிர்ந்து விடும் எனும் சூழ்நிலையில், பேச முடியாது தவித்த நடிகர் விவேக் அதை தன் பாணியில் எதிர்கொண்ட சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது.

பிரபல தனியார் இணையதளத்தின் விருது வழங்குவிழாவில் கலந்து கொண்ட விவேக்கிடம், தளபதி பற்றி கூறுங்கள் என நிகழ்ச்சி தொகுப்பாளர்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

ஆனால் தளபதி என்ற அந்த ஒற்றை சொல்லுக்கு, அரங்கம் இடைவெளியே இன்றி அதிர, பதிலுக்கு விவேக், "நான் போய் டீ சாப்பிட்டுவிட்டு வந்து சொல்லட்டுமா" என நகைச்சுவையாக பதிலளிக்க அதிர்வலைகள் சிரிப்பலைகளாக மாறி சகஜ நிலைக்கு வந்தது.