Breaking News

'விஸ்வாசம்' படத்திற்கு எதிராக நிகழ்த்த சதி...! கெத்தாக பதிலடி கொடுத்த படக்குழு


சிறுத்தை சிவா இயக்கத்தில், தல அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் விஸ்வாசம். இத்திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாக இருக்கும் நிலையில், குறிப்பிட்ட தேதியில் அப்பட ரிலீஸினை தடுக்க பல்வேறு இடையூறுகள் கொடுக்கப்பட்டு வருவதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

இதன் பின்னணியில், பொங்கல் அன்று சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'பேட்ட' திரைப்படம்  ரிலீசாக இருப்பதும் காரணமாக கூறப்படுகிறது. விஜய், அஜித், ரஜினி போன்ற பெரிய நடிகர்கள் திரைப்பட ரிலீஸ் என்றாலே, போதிய தியேட்டர்கள் கிடைக்காமல் சிறிய படங்கள் பின்வாங்குவது தொடர்கதையாகி வருகிறது.

இப்படி இருக்க ரஜினி, அஜித் என்ற இரு பெரும் நடிகர்களின் படங்கள் ஒரே தேதியில் ரிலீஸ் ஆனால் இரு தரப்புக்கும் தியேட்டர்கள் கிடைப்பதிலும் லாபம் ஈட்டுவதிலும் சிக்கல் ஏற்படும்.

இதனை மனதில் கொண்டு ஒரு சில விநியோகஸ்தர்கள் விஸ்வாசம் திரைப்படத்தை பொங்கலுக்கு முன்னதாகவோ அல்லது பொங்கலுக்கு பிறகோ ரிலீஸ் செய்யக் கோரி கோரிக்கை விடுத்து வருகின்றனராம்.

மேலும் பேட்ட படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமும் பல்வேறு நெருக்கடிகளை விஸ்வாசம் படக்குழு சந்தித்து வருவதாகவும் ஒரு தகவல் திரைத்துறையில் வலம்வருகிறது.

இதனால் விஸ்வாசம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாது என்ற வதந்தியும் பரவ துவங்கியதையடுத்து, பொங்கல் ரிலீஸினை உறுதி செய்யும் விதத்தில் பல்வேறு இடங்களில் அப்படத்தின் பிரமாண்ட கட்அவுட் களை நிறுவி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது அப்படக்குழு.