Breaking News

"அஜித்துடன் நடிக்கணும்" யூட்யூப் புகழ் சமையல் டாடி'யின் ஆசை


யூட்யூப் இணையதளத்தில் தன்னுடைய சமையல் நிகழ்ச்சியின் மூலம் உலக அளவில் பிரபலமானவர் வில்லேஜ் புஃட் பேக்டரி ஆறுமுகம். 

கிராமத்து இயற்கை பின்னணியில், நாக்கில் எச்சில் ஊற வைக்கும் சுவையான உணவுகளை இவர் சமைக்கும் காணொளிகளுக்கு உலகம் முழுவதும் சுமார் 20 லட்சம் ரசிகர்கள் உள்ளனர்.

ஒரு சாதாரண கூலி தொழிலாளியாக இருந்து, இப்பொழுது உலக பிரபலம் அடையும் நிலைக்கு வளர்ந்திருக்கும் ஆறுமுகம் சினிமா குறித்த தன்னுடைய பார்வையை சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.    

'தற்பொழுது 64 வயதை எட்டி இருக்கும் நான் என் வாழ்வில் 61 வயது வரை கஷ்டங்களை மட்டுமே பார்த்தவன். நான் செய்யாத வேலைகளே இல்லை அவற்றில் ஒன்றுதான் இந்த சமையல், அதன் தயவாலும் என் மகன்களின் ஆதரவாலும் இன்று இப்படியொரு நிலையை எட்டி இருக்கிறேன்.


மேலும் சிறு வயதில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வமும் எனக்கு இருந்தது, ஒரு படத்தில் ஜுனியர் ஆர்டிஸ்ட்டாகவும் நடித்திருக்கிறேன். ஆனால் அந்த திரைப்படம் வெளிவரவில்லை.

எம்.ஜி.ஆர் அவர்களுக்கு பிறகு தற்பொழுது எனக்கு பிடித்த நடிகர் அஜித். அவர் நடிப்பும், குணமும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒருவேளை எனக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அஜித் அவர்களின் படத்தில் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன்' என்று தனது சினிமா கனவை பற்றி மனம் திறந்து இருந்தார்.