Breaking News

யாரு படம் ஓடினாலும் ஹீரோ நாங்க தான்..! 'பேட்ட'யை அதிர வைத்த ''தளபதி''...


ரஜினி நடிப்பில் வெளியாக உள்ள பேட்ட திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை அதிர வைத்து இருக்கிறார் தளபதி விஜய்.

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில், ரஜினி, விஜய் சேதுபதி, திரிஷா, சிம்ரன் ஆகியோர் நடித்து பொங்கலுக்கு வெளிவர இருக்கும் திரைப்படம் "பேட்ட".

சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கும் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் போது, நடிகர் விஜயின் சர்க்கார் திரைப்பட பாடல் ஒலிக்க, ரசிகர்கள் ஆராவாரத்தால் அரங்கம் அதிர்ந்தது.

நிகழ்ச்சியின் நாயகன், சூப்பர் ஸ்டார் என்ற போதிலும், மற்றொரு நடிகருக்கு குவிந்த கரகோஷம், படக்குழுவினரை சற்று கதிகலங்க செய்ததையும் அப்பொழுது கண்கூடாக காண முடிந்தது.