Breaking News

22 வருடங்களுக்கு முன்பே உங்களை சந்தித்திருக்கிறேன்..! நடிகையிடம் நெகிழ்ந்த முதல்வர்


தமிழக முதல்வர் 'எடப்பாடி பழனிசாமி' அவர்கள் நடிகை கஸ்தூரியை அண்மையில் சந்தித்து அவரது சமூக சேவைகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறார்.

பிரபல நடிகையான கஸ்தூரி, நடிப்பு மட்டுமல்லாது சமூக வலைத்தளங்கள் வழியாக சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து பரபரபப்பை ஏற்படுத்தி வருபவர்.

மேலும் பல சமூக அக்கறை செயல்களிலும் ஈடுபட்டு வரும் இவரை பாராட்டும் விதத்தில் சந்தித்து பேசி இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இந்த தகவலை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்த நடிகை கஸ்தூரி, 'தன்னை பற்றி முதல்வர் இவ்வளவு அறிந்திருப்பார் என எதிர்பார்க்க வில்லை.

மேலும் அவர் என்னை 22 வருடங்களுக்கு முன்பு சந்தித்த தருணத்தை நினைவு கூர்ந்ததும் வியக்க வைத்தது. கஜா புயலின் போது திறம்பட செயல்பட்டதற்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்' என நெகிழ்ந்து பதிவிட்டு இருக்கிறார்.