Breaking News

ஆன்லைன் ஷாப்பிங் விபரீதம்..! அமேசானிடம் ஏமாந்த நடிகை


இந்த இணைய உலகில் ஆன்லைன் ஷாப்பிங் என்ற விசயமானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆஃபர் என்ற பெயரில் தள்ளுபடி விலையில் பொருட்களை அள்ளிக் கொடுப்பதால் சாதாரண மக்களும் ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய துவங்கி இருக்கின்றனர்.

இதனால் ஒருபுறம் சாதகம் என்றாலும், பாதகமும் உள்ளது என்பதனை நிரூபித்து இருக்கிறது சமீபத்திய சம்பவம் ஒன்று.

பல ஆயிரம் கொடுத்து ஆன்லைனில் பொருட்களை வாங்குபவர்கள், அப்பொருட்களுக்கு பதிலாக குப்பைகளையும் கற்களையும் பெறுவது தொடர்கதையாகி வருகிறது.

இதில் சாதாரண மனிதர்கள் சிக்கும் போது, குறிப்பிட்ட நிறுவனங்களின் தரப்பில் எந்த உதவியும் செய்யப்படுவது இல்லை என்பது பொறுத்துக் கொள்ள முடியாத கொடுமை.

இப்படி இருக்க பிரபல நடிகையான சோனாக்சி சின்ஹா, தான் ஆர்டர் செய்த 18000 ரூபாய் மதிப்புடைய ஹெட்போனுக்கு பதிலாக கல்லை பெற்ற சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு தொடர்புடைய அமேசான் நிறுவனதிற்கு பேரிடியாக இறங்கியுள்ளது.


தனது ஹெட்போனுக்கு பதிலாக, பெட்டியில் கல்லை கண்டு அதிர்ந்த நடிகை, அமேசான் வாடிக்கையாளர் உதவி மையத்தை தொடர்பு கொண்டும் எந்த வித உதவியும் செய்யப்படவில்லை. இந்த கோபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் இதனை பதிவிடவே பதறி அடித்துக் கொண்டு தேடி வந்திருக்கிறது அமேசான் நிறுவனம்.