Breaking News

நமக்குத்தான் அரசாங்கம்..! அரசாங்கத்துக்காக நாம இல்ல..! மிரட்டும் சீதக்காதி ப்ரோமோ


விஜய் சேதுபதியின் 25வது திரைப்படமான சீதக்காதியின் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.

பாலாஜி தரணீதரன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, ரம்யா நம்பீஸன், காயத்ரி, பார்வதி நாயர் ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் சீதக்காதி.

இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, ஆரஞ்சு மிட்டாய் திரைப்படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக வயதான தோற்றத்தில் நடித்து இருக்கிறார்.

இவரது இந்த தோற்றத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இத்திரைப்படத்தின் ப்ரோமோ ஒன்றும் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.

மக்களாகிய நமக்குத்தான் இந்த அரசாங்கமேயொழிய, அரசுக்காக மக்கள் இல்லை என கோர்ட்டில் விஜய் சேதுபதி பேசுவது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும் அந்த ப்ரோமோவானது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறது.