Monday, 10 December 2018

கைவிட்ட கமல் காப்பாற்றிய விஜய் சேதுபதி... வெளிவராத சீதக்காதி சீக்ரெட்


வயதான தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் சீதக்காதி தான் தற்பொழுது தமிழ் சினிமா ரசிகர்களிடையே ஹாட் டால்க்.

விஜய் சேதுபதிக்கு இருக்கும் ரசிகர்களுக்கு, குறிப்பிட்ட வகை கதைகளில் அவர்  நடித்தால் கண்டிப்பாக ஹிட் ஆகும் என தெரிந்திருந்தும், வித்யாசமான கதாப்பாத்திரங்களை நாடி செல்ல வைக்கும் அவரது நடிப்பு பசியும் திரை துறையினரை வெகுவாக கவர்ந்த விஷயங்களில் ஒன்று.

இப்படி புது புது கதாப்பாத்திரங்களை தேடி செல்லும் அவருக்கு, சீதக்காதி எனும் திரைப்படத்தின் வயதான தோற்றம் சவாலான ஒன்றாகவே அமைந்து இருந்ததாம்.

இன்று பலரையும் வியப்பில் ஆல்த்தி இருக்கும் அந்த தோற்றம், நடிகர் கமல் ஹாசனை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது என்பதுதான் சமீபத்தில் வெளியாகி இருக்கும் தகவல்.

ஆம், இந்த திரைப்படத்தில் நாயகனாக நடிக்க வைக்க, கமல் ஹாசனையே அணுகி இருக்கிறார் இயக்குனர் பாலாஜி தரணீதரன். ஆனால் ஒரு சில காரணங்களுக்காக அவர் மறுத்துவிடவே, பிறகுதான் கிடைத்திருக்கிறது மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் கால்சீட்.

   
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();