Breaking News

பிகினியில் நடித்தது ஒரு குத்தமா...? புலம்பும் இளம் நடிகை


தெலுங்கு சினிமா போல தமிழ் சினிமாவிலும் கவர்ச்சியை வாரி வழங்க நினைத்த நடிகை ரெஜினா கேசன்ட்ராவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளனர் தமிழ் சினிமா துறையினர்.

தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்ப அம்மொழி படங்களில் படுகவர்ச்சி காட்டி நடித்து வந்தவர் ரெஜினா. அங்கே அப்படி என்றால் அதற்கு நேர் மாறாக தமிழில் இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்து வந்தார்.

என்றாலும் தன்னை முன்னணி நடிகையாக அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல  முயன்ற அவர், கௌதம் கார்த்திக் உடன் நடித்த 'மிஸ்டர் சந்திரமௌலி' திரைப்படத்தில் பிகினி உடையில் தோன்றி கவர்ச்சி பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.

ஆனால் இந்த திடீர் மாற்றமே அவருக்கு வினையாக முடிந்திருக்கிறது. விஷயம் என்னவென்றால் அவர் பிகினி உடையில் நடித்ததை பார்த்து, தயாரிப்பாளர்கள் பலர் நாயகி வாய்ப்பிற்கு பதிலாக, குத்து பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடவே  அழைப்பு விடுக்கின்றார்களாம்.     

இதனால் அதிர்ச்சியடைந்த ரெஜினா, கவர்ச்சி என்றாலே கதை கூட கேட்காமல் நோ சொல்ல துவங்கி இருக்கிறாராம்.