Breaking News

அஜித் ரசிகர் மன்றங்களை கலைத்ததன் உண்மை காரணம்...! ஒரே வார்த்தையால் நிகழ்ந்த விபரீதம்...!


நடிகர் அஜித் இன்று தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு இடத்தில் இருக்கும் நடிகர்களில் ஒருவர். இந்த வளர்ச்சிக்கு அவரது ரசிகர்கள் கொடுத்த மாபெரும் ஆதரவும் ஒரு முக்கிய காரணம்.

இப்படி தனக்கு இருந்த திரளான ரசிகர்களை ரசிகர் மன்றங்கள் மூலம் ஒருங்கிணைத்திருந்த அஜித், திடீரென மன்றங்களை களைத்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தார்.

அஜித்தின் இந்த செயலுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தாலும், உண்மையிலேயே இந்த முடிவின் பின்னணியில் இருந்தது ரசிகர் ஒருவரின்   கோபமான வார்த்தை தானாம்.

ஒருமுறை நடிகர் அஜித்தை சந்திக்க ரசிகர் மன்றத்தை சேர்ந்த ரசிகர்கள் பலர், அவரது வீட்டின் முன்பு காத்திருந்தனராம். நீண்ட நேரம் ஆகியும் அஜித் வெளியே வராத காரணத்தினால் பொறுமை இழந்த ரசிகர்கள் கூச்சலிட துவங்கியுள்ளனர். 

அதன் பிறகு அஜித், அந்த ரசிகர்களுக்கு தரிசனம் வழங்கிய போதும், ஆத்திரமடைந்த ரசிகர் ஒருவர் "உங்களுக்காக தானே எங்கள் கைக்காசை போட்டு போஸ்டரெல்லாம் ஒட்டுகிறோம், ஆனால் உங்களுக்கோ எங்களை பார்க்க கூட மனமில்லையே" என கோபமாக பேசி விட்டாராம்.

ரசிகர்கரின் இந்த வார்த்தையை கேட்ட மறுகணமே ரசிகர்கள் எனக்கு ரசிகர்களாய் இருந்தால் போதும் மன்றங்கள் தேவையில்லை எனக் கூறி, மன்றங்களை கலைக்க கோரி உத்தரவிட்டு விட்டாராம் அஜித்.