Breaking News

இதுதான் எங்க மீனவர்களின் அன்பு..! ராட்சசன் நடிகையை நெகிழவைத்த சம்பவம்


தமிழக்தில் அதிக பிரச்சனைகளுக்கு ஆளாகும் ஒரு சமுதாயம் என்றால் அது மீனவ சமுதாயம் தான். என்றாலும் பேரிடர்களின் போதும் பிற சமூக பிரச்சனைகளின் போதும் முதல் ஆளாக பிறருக்கு கை கொடுப்பது அவர்களாகத்தான் இருக்கும். இப்படிப் பட்ட மீனவ மக்களின் அன்பை நேரில் பார்த்து நெகிழ்ந்து இருக்கிறார் தமிழ் சினிமாவின் இளம் நடிகை ஒருவர்.

சமீபத்தில் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ராட்சசன். இதில் அம்மு எனும் கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் அபிராமி. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் துப்பாக்கி முனை எனும் படத்தில் நடித்தது குறித்த அனுபவத்தை பகிர்ந்திருந்தார்.



அதில் துப்பாக்கி முனை திரைப்படத்தில், அபிராமி சம்பந்தப்பட்ட காட்சிகள் ராமேஸ்வரத்தில் மீனவர் ஒருவரது வீட்டில் படமாக்கப்பட்டதாம். படப்பிடிப்புகள் முடியும் வரை அந்த மீனவரின் குடும்பத்தினர் தன்னை ஒரு மகளை போல பார்த்துக் கொண்டதாகவும், ராமேஸ்வரத்தின் பிற இடங்களில் படப்பிடிப்புகள் நடந்தாலும் தனக்கு அவர்கள் வீட்டில் இருந்து சாப்பாடு வந்துவிடும் என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்து இருக்கிறார்.