Breaking News

ஆபாச காட்சியில் காஜலை நடிக்க வைத்தது ஏன்...? இயக்குனர் விளக்கம்


பாரிஸ் பாரிஸ் திரைப்படத்தில் காஜல் அகர்வால் நடித்த சர்ச்சை காட்சி குறித்து அப்படத்தின் இயக்குனர் பதில் அளித்து இருக்கிறார். ஹிந்தியில் கங்கனா ராணட் நடித்து, 2014ம் ஆண்டு வெளியாகி சக்கை போடு போட்ட திரைப்படம் க்வீன்.

இத்திரைப்படத்தின் ரீமேக் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள நிலையில், அப்படங்களில் டீசர் அடுத்தடுத்து சில நாட்களுக்கு முன் ரிலீஸ் செய்யப்பட்டது.

என்றாலும், காஜல் அகர்வால் நடித்துள்ள தமிழ் பதிப்பான பாரிஸ் பாரிஸ் டீசர் மட்டும் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  அதற்கு அந்த டீசரில் இடம்பெற்றுள்ள சர்ச்சை காட்சி காரணமாக கூறப்படுகிறது.

இதனால், நடிகை காஜல் அகர்வாலின் மார்பை, சக நடிகை சீண்டுவது போன்ற 'அந்த காட்சி பிற மொழி பதிப்புகளில் இடம் பெறாத போது தமிழ் பதிப்பில் மட்டும் ஏன் வைத்திருக்கிறீர்கள்' என்ற கேள்வியானது இயக்குனர் ரமேஷ் அரவிந்திடம் முன்வைக்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த அவர், ஹிந்தி பதிப்பிலும் அப்படியொரு காட்சி இடம் பெற்று இருந்தது, அந்த சர்ச்சைக்கு காட்சிக்கு பின்னால் இருக்கும் காரணத்தை திரைப்படத்தில் பார்த்தால் உங்களுக்கு ஆபாச காட்சியாக தெரியாது என தெரிவித்து இருக்கிறார்.