Breaking News

மீண்டும் தமிழுக்கு வரும் நஸ்ரியா..! அதுவும் இந்த உச்ச நட்சத்திரத்தின் திரைப்படத்தில்


தமிழ் சினிமா ரசிகர்களை தான் நடித்த ஒரு சில திரைப்படங்களிலேயே கவர்ந்தவர் நடிகை நஸ்ரியா. தான் உச்சத்தில் இருந்த சமயம் என்றும் பாராது, நடிகர் பகஃத் பாசிலை திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு விலகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

என்றாலும் அவர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற அன்பு கட்டளை போட்டு வந்தனர் ரசிகர்கள். அதன் படி, கூடே எனும் மலையாள திரைப்படத்தில் ரீ என்ட்ரி கொடுத்த அவர், விரைவில் தமிழ் திரைப்படம் ஒன்றில் நடிக்க இருக்கும் தகவலும் கசிந்துள்ளது.

அதன்படி, போனிகபூர் தயாரிப்பில் 'தீரன் அதிகாரம் ஒன்று' வினோத் இயக்கத்தில், தல அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் நஸ்ரியாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்ததாகவும், இதற்கு நஸ்ரியா தரப்பு ஒப்புதல் அளித்துவிட்டதாகவும் தெரிகிறது.     

அப்படத்தின் படப்பிடிப்புகள் பூஜையுடன் இன்று துவங்கியுள்ள நிலையில், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.