Breaking News

"நாயகிகளுடன் ரொமான்ஸ் செய்யணும்" அடம்பிடிக்கும் இசையமைப்பாளர் - சினி சீக்ரட்ஸ்


திரைத்துறையில் இப்பொழுது இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், நடன இயக்குனர் என பாரபட்சம் பார்க்காது அனைத்து தரைப்பினரும் நாயகனாக நடிக்க துவங்கி விட்டனர்.

அப்படி இசையமைப்பாளராக இருந்து நடிகனாக திரைத்துறை பிரபலம் ஒருவர் தற்பொழுது ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டி வருகிறாராம்.

நடிக்க வந்த புதிதில் வித்யாசமான கதைக்களங்களை தேர்வு செய்து வெற்றி படங்களை கொடுத்து வந்த அவர், நாயகிகளுடன் ரொமான்ஸ் செய்வதை முற்றிலும் தவிர்த்து வந்தவர்.

இருப்பினும் சமீபத்திய படங்கள் அவருக்கு கைகொடுக்காத நிலையில், நாயகிகளுடன் ரொமான்ஸ் செய்வது எனும் தன் முடிவில் விடாப்பிடியாக இருந்து வருகிறாராம். இதற்காக அவர் தீவிர நடிப்பு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்பதும் கூடுதல் தகவல்.