Tuesday, 4 December 2018

அதிர்ச்சி!!! "மரண மாஸ்" பாடலும் காப்பியா??? சிக்கினார் அனிருத்


பேட்ட படத்தின் மரண மாஸ் பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும் சமயத்தில், அதன் இசை அனிருத் உடையது அல்ல என ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில், சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து திரைக்கு வர இருக்கும் திரைப்படம் பேட்ட. இப்படத்தின் மரண மாஸ் எனும் பாடலின், லிரிக்கல் வீடியோவானது நேற்று வெளியிடப்பட்டது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவர்ந்த இப்பாடலின் வெற்றிக்கு பின்னணியில் இடம் பெற்று இருந்த மேள, தாள ஒலிகள் முக்கிய காரணமாக அமைந்தது.

அதனை இசை கலைஞர்கள் வாசிக்கும் வீடியோ ஒன்றையும் இசையமைப்பாளர் அனிருத் முன்னதாக வெளியிட்டு இருந்தார். இப்படி இருக்க சமீபத்தில் வெளிவந்திருக்கும் வீடியோவில், கோவில் திருவிழா ஒன்றில் அதே இசைக்கலைஞர்கள், அதே மரண மாஸ் இசையில் வாசிக்கும் காட்சி இடம் பெற்று இருக்கிறது.
இதனால் மரண மாஸ் பாடல் இசையானது, அந்த இசைக்கலைஞர்கள் உடையது அதனை அனிருத் இசையமைக்கவில்லை, போற போக்கில் அவர்களது இசையையே பாடலாக்கி விட்டார் என ரசிகர்கள் பலர் விமர்சிக்க துவங்கியுள்ளனர்.

இந்த சர்ச்சைக்கு முன்னதாக, கோலமாவு கோகிலா திரைப்படத்தின் கல்யாண வயசு பாடலிலும் இதே போன்று ஒரு சர்ச்சையை அனிருத் சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();