Breaking News

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குத்தாட்டம்..! மிரட்டிய "மரண மாஸ்"


சமீபத்தில் வெளியான ரஜினியின் பேட்ட திரைப்படத்தின் "மரண மாஸ்" பாடல் குழந்தைகள் பெரியவர்கள் என அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது.

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில், சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிற பொங்கலுக்கு ரிலீசாக இருக்கும் திரைப்படம் பேட்ட.

இந்த திரைப்படத்திற்கு வெற்றிகரமான இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருக்கிறார்.

விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுக்கு மெகா ஹிட் பாடல்களை அனிருத் கொடுத்துள்ள நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கும் பேட்ட திரைப்படத்தில் வேற லெவல் பாடல்களை அவர் கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே வலுத்தது.

இந்த எதிர்ப்பார்ப்பினை நேற்று வெளியான பேட்ட திரைப்படத்தின் மரண மாஸ் பாடல் நிவர்த்தி செய்துள்ளது என்றே கூறலாம். பாடல் வெளியாகி இன்னும் 1 நாள் கூட முழுமையடையாத நிலையில், சுமார் 35 லட்சம் பார்வையாளர்களை பெற்று யூட்யூப் தளத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மரண மாஸ் பாடலுக்கு குத்தாட்டம் போடும் காணொளிகளை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையில் தோன்றினாலே திரையரங்குகளில் விசில் பறக்கும். இப்படி இருக்க இந்த மெகா ஹிட் மரண  மாஸ் பின்னணியில் அவர் தோன்றினால் திரையரங்குகள் அதிரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.