Tuesday, 4 December 2018

மாரி இஸ் பேக்..! மாரி-2 ரிலீஸ் தேதி அறிவிப்பு



பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் மாரி-2 திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான திரைப்படம் மாரி. இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமானது இந்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்கியது.

தாதாவாக தனுசும், சாய் பல்லவி கதாநாயகியாகவும், வரலக்ஸ்மி முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள்  கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது.

அதனை தொடர்ந்து இதன் ரிலீஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், மாரி-2 வருகிற டிசம்பர் 21ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் அதிகாரபூர்வ தகவலை நடிகர் தனுஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்து இருக்கிறார்.


மேலும் அப்படத்தின் ட்ரைலரானது வருகிற டிசம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆகும் என்ற கூடுதல் தகவலையும் அவர் வெளியிட்டு இருக்கிறார்.  
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();