Breaking News

திருமணத்திலும் போட்டா போட்டி...! முட்டி மோதிக்கொள்ளும் நடிகைகள்


திரைத்துறையில் நாயக நாயகிகளுக்கு இடையேயான போட்டிகள், சண்டைகள் சகஜமான ஒன்று. இப்படி இருக்க ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது முன்னணி பாலிவுட் நாயகிகள் இருவரது போட்டி.

நடிகைகள் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் பாலிவுட்டில் மாபெரும் ரசிகர் பட்டாளத்தையும் நாயகர்களுக்கு இணையான சம்பளத்தையும் பெரும் நாயகிகளில் ஒருவர். 

முன்னதாக திரைத்துறையில் வாய்ப்புகளை பெறவும், முன்னணி நாயகர்களின் பட வாய்ப்புகளை பெறவும் முட்டி மோதிக்கொண்ட இவர்கள் தற்பொழுது தங்களது திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்துவதிலும் போட்டா போட்டி போட்டு வருகின்றனர்.


நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாடகர் நிக் ஜொனாஸையும், தீபிகா படுகோன் நடிகர் ரன்வீர் சிங்கையும் சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என இருவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் மிகப் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. உறவினர்கள், திரைத்துறை நண்பர்கள் என தனி தனியாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளுக்கு மட்டும் கோடிக்கணக்கில் செலவு செய்து, நீயா நானா என பார்த்து விடலாம் என்று கெத்து காட்டி வருகின்றனர்.