Breaking News

சென்சார் குழுவை மிரளவைத்த விஸ்வாசம் - வெளியான சுவாரஸ்ய தகவல்


தல அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவர இருக்கும் விஸ்வாசம் திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அந்த எதிர்பார்ப்பை மேலும் எகிற செய்யும் விதத்தில் வெளியாகி இருக்கிறது அத்திரைப்படம் குறித்த நிகழ்வு.

பொங்கல் ரிலீஸை ஒட்டி சில நாட்களுக்கு முன்பு தணிக்கை சான்றிதழ் பெற அனுப்பி வைக்கப்பட்டது விஸ்வாசம். அதற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பார்க்கும் 'U' சான்றிதழும் வழங்கப்பட்டது.

இந்த தகவல் அப்படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், தணிக்கை குழுவினரிடம் அப்படதிற்கு கிடைத்த பாராட்டு குறித்த தகவலும் கசிந்துள்ளது.

அதன்படி, விஸ்வாசம் திரைப்படத்தை பார்த்து விட்டு, படம் செம மாஸ் என தணிக்கை குழுவினர் பாராட்டி சென்றதாக தெரிய வந்துள்ளது.