Breaking News

பிரபலம் இருந்தா மட்டும் முதல்வர் ஆகிட முடியாது...! அரவிந்த் சாமி நறுக்...!


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், ஒரு படம் நடித்த நாயகன் நாயகிக்கு கூட அரசியல் ஆசை வந்து விட்டது. ஆளாளுக்கு நான் வருவேன், நீ வருவேன் என அரசியலில் குதிக்க ஆயத்தம் ஆகி வருகின்றனர்.

இப்படி இருக்க பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது, பிரபல நடிகர் அரவிந்த் சுவாமியின் பதில். 

90 களில் முன்னணி நாயகனாக வலம்வந்து, பின்னர் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய், தனி ஒருவன் திரைப்படத்தின் மூலம் இழந்த பிரபலத்தை பல மடங்கு அதிகம் பெற்று ரீ என்ட்ரி கொடுத்தவர் அரவிந்த் சாமி.


இவரது நடிப்பில் விரைவில், சதுரங்க வேட்டை 2, நரகாசுரன், வணங்காமுடி ஆகிய திரைப்படங்கள் வெளியாக இருக்கும் நிலையில், இவரது அரசியல் என்ட்ரி குறித்த கேள்வியானது நேர்காணல் ஒன்றில் முன்வைக்கப்பட்டது.

அதற்கு, எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. ஒரு நடிகன் என்ற பிரபலம் இருப்பதனால் என்னால் அரசியல்வாதி ஆகிவிட முடியாது. முதலில் அரசியல் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும்.

அப்படி இல்லாது, நான் திரைப்படங்களில் மக்களை காப்பாற்றி இருக்கிறேன். அதனால் அரசியல் வாதி ஆவேன் என்று அரசியலில் குதிப்பதெல்லாம் சரிப்பட்டு வராது.



இப்பொழுது இருக்கும் அரசியல்வாதிகளுக்கு அந்த தகுதி உள்ளதா என்றால், அவர்கள் சிறு வயதில் இருந்தே அத்துறையில் இருப்பவர்கள். அரசியல்வாதி ஆக அந்த அனுபவம் போதும்' என அரசியலுக்கு வரும் நடிகர்களை விமர்சிக்கும் விதத்தில் பதில் அளித்து இருக்கிறார்.