Breaking News

நிர்வாண புகைப்படத்திற்கு "இரண்டு லட்சம்"... வாட்சப்பில் பேரம் பேசி சிக்கிய இயக்குனர்


'மீட்டு' இயக்கம் இந்தியாவில் தலைதூக்கியதையடுத்து பல திரைத்துறை பிரபலங்களின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்நிலையில் இந்த சில்மிஷவாதி குற்றச்சாட்டில் இணைந்து இருக்கிறார் பிரபல காஸ்டிங்க் இயக்குனரான மோகன்.

இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் துணை நடிகை ஒருவரும், பட்டதாரி இளம்பெண் ஒருவரும், காஸ்டிங் இயக்குனர் மோகன் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாலியல் புகார் ஒன்றிணை அளித்து இருக்கின்றனர்.

அவர்கள் ஆதாரமாக சமர்ப்பித்துள்ள வாட்சப் மெசேஜ்களில், நாயகி வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி, கவர்ச்சி புகைப்படங்களை மோகன் அனுப்ப கூறிய குறுந்தகவல்கள் இடம் பெற்று இருப்பதாக, பாதிக்கப்பட்ட பெண்களின் வழக்கறிஞர் அபிமன்யூ தெரிவித்து இருக்கிறார்.

மேலும் நிர்வாண புகைப்படம் அனுப்பினால் இரண்டு லட்சம், டாப்லெஸ் புகைப்படத்திற்கு ஒன்றரை லட்சம், உள்ளாடைகளுடன் இருக்கும் புகைப்படங்களுக்கு ஒரு லட்சம் என பெண்களிடம் மோகன் பேரம் பேசிய வாட்சப் குறுந்தகவலும் அந்த ஆதாரத்தில் அடக்கம் என அவர் தெரிவித்து இருந்தார்.

இப்படி தன்மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார்களை பகிரங்கமாக மறுத்து இருக்கும் மோகன், தான் படவாய்ப்பு வாங்கி தருவதாக கூறி யாரையும் இணங்க வைக்கவில்லை எனவும் தன் அறையில் ரகசிய கேமராவை பொருத்தி  தனது தனிப்பட்ட வீடியோக்களை வெளியிட்டு வருபவர்கள் மீது புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்து இருக்கிறார்.