Sunday, 4 November 2018

தேர்தலில் போட்டியிடும் யோகிபாபு.... எமலோகத்தில் பரபரப்பு..!


தற்பொழுது தமிழ் சினிமாவின் காமெடியில் கலக்கி ஒரு கதாநாயகன் அந்தஸ்தோடு வலம்வருபவர் யோகிபாபு. இவர் இல்லாத திரைப்படங்களே இல்லை என சொல்லும் அளவிற்கு, சர்கார், விஸ்வாசம், பேட்ட என பல முன்னணி திரைப்படங்களில் நடித்து வரும் இவர், விரைவில் தேர்தலிலும் போட்டி இட உள்ளார்.

அட பூலோகத்தில் இல்லைங்க நம்ம எமலோகத்தில்... ஆமாம் அவர் நடித்து வரும் மகாபிரபு எனும் திரைப்படத்தில் தான், எமலோகத்தில் எமன் பதவிக்கு நடைபெறும் தேர்தலில் போட்டியிட இருக்கிறாராம் நம் யோகிபாபு. 


இதனை விமல் நடித்து விரைவில் திரைக்கு வரும் கன்னிராசி திரைப்படத்தை இயக்கிய முத்து குமரன் அவர்களே இயக்க இருக்கிறார்.

எமலோகத்தில் தற்போதைய எமனின் பதவி முடிவுக்கு வரும் நிலையில், அடுத்த எமன் யார் என யோகிபாபுவுக்கும், கருணாகரனுக்கும் நடக்கும் போட்டா போட்டி தான் இந்த மகாப்பிரபு படத்தின் கதை கரு என்ற தகவலும் தற்பொழுது வெளிவந்துள்ளது.


ஏற்கனவே நடிகர் யோகிபாபு, கூர்க்கா எனும் திரைப்படத்தில் நாயகனாக நடித்து வரும் நிலையில், அடுத்த எமதர்மானாக தர்ம பிரபு திரைபப்டதிலும் நாயகன் அவதாரம் எடுக்க இருக்கிறார்.

ஆக்சன் ஹீரோ ஆகாத வரைக்கும் உங்கள் காட்டில் மழைதான் யோகி...!
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();