Friday, 9 November 2018

'சர்கார் விவகாரம்' முதல்வருக்கு சமாதான புறா அனுப்பிய விஜய்...


சர்கார் திரைப்பட விவகாரம் தமிழகத்தில் தற்பொழுது விஸ்வரூபம் எடுத்துள்ளது. தங்களை விமர்சிக்கும் காட்சிகள் நீக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், பிரச்சனையை சுமூகமாக முடிக்க நடிகர் விஜய் முயற்சி செய்து வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

 ஏற்கனவே படத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சை காட்சிகளை கத்தரிக்க அப்படக்குழு ஒப்புக்கொண்ட நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்திக்க நடிகர் விஜய் அனுமதி கேட்டிருக்கும் விஷயமும் தற்பொழுது கசிந்திருக்கிறது.

முழுக்க முழுக்க இந்த சந்திப்பானது சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதற்காவே, என விஜயின் இந்த முயற்சி குறித்து பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக மெர்சல் திரைப்படத்திற்கும் இது போன்ற பிரச்சனை எழுந்தபோது, மாநில அரசின் ஆதரவை விஜய் நாடி இருந்தார். ஆனால் இம்முறை பிரச்சனையை கிளப்பி இருப்பதே அந்த மாநில அரசுதான் எனும் நிலையில், என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.  
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();