Breaking News

விஜய் ரசிகர்களுக்கு போலீஸ் வலைவீச்சு...! இத செஞ்சது ஒரு குத்தமா...? தெறித்து ஓடும் ரசிகர்கள்


சர்கார் திரைப்படத்திற்கெதிரான போராட்டம், நடிகர் விஜயின் அரசியல் கனவை அடியோடு தகர்க்க 'அதிமுக'வினர் போட்ட ஸ்கெட்ச் என அரசியல், சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

அப்படத்தின் சர்ச்சையான அரசியல் விமர்சன காட்சிகள் நீக்கப்படும் வரை, திரையிட விடமாட்டோம் என்கிற ரீதியில் 'அதிமுக'வினர் தமிழகமெங்கும் திரையரங்குகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் செலவு செய்து வைத்த பிரமாண்ட போஸ்டர்களும் கிழித்தெறியப்பட்டு வருகிறது. பலத்த போலீஸ் பாதுகாப்பு இருந்தும் அவர்கள் முன்னதாகவே இந்தசம்பவங்கள் நடைபெற்று வருகிறது என்பதுதான் கொடுமை.

இந்த கொடுமை போதாதென்று, சர்கார் படத்தில் விஜய் செக்சன் 49-பி என  சட்டம் பேசுவதை பார்த்து கைதட்டிய ரசிகர்களை, இந்த சட்டத்தையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள் என அனுமதி இன்றி பதாகைகள் வைத்ததற்காக வழக்கு பதிவு செய்து கைது செய்ய வலைவீசி வருகிறது தமிழக போலீஸ்.


தஞ்சை, திருவாரூர், கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் மட்டும் சுமார் 83 விஜய் ரசிகர்கள் மீது இப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில், கைது நடவடிக்கைக்கு பயந்து அவர்கள் தலைமறைவாகி வருகின்றனர்.