Breaking News

ஒரு மழைக்கே தாங்காத விஜயின் 175 அடி கட் அவுட்...! ரசிகர்கள் ஏமாற்றம்...!


கேரளா விஜய் ரசிகர்கள் நிறுவி இருந்த  175 அடி விஜயின் கட் அவுட் ஆனது மழையின் காரணமாக அகற்றப்பட்டு உள்ளது.

கேரளாவின் கொல்லம் பகுதியை சேர்ந்த விஜய் ரசிகர்கள், சர்கார் திரைப்படத்தினை வரவேற்கும் பொருட்டு இந்திய சினிமா வரலாற்றிலேயே இது வரை எவரும் செய்திடாத ஒரு புதிய முயற்சியாக 175 அடியில் பிரமாண்ட கட் அவுட் ஒன்றினை நிறுவி இருந்தனர்.

நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டு மிகப் பிரமாண்டமாக இதன் திறப்பு விழாவும் சமீபத்தில் நடைபெற்று இருந்தது. இந்த பிரமாண்ட முயற்சியை காண, தமிழகத்தை சேர்ந்த விஜய் ரசிகர்களும் கேரளா சென்று வந்தனர்.


இதனால் அந்த பகுதியே ஒரு சுற்றுலாத்தளம் போல காட்சி அளித்திருந்த நிலையில், அங்கு பெய்த கன மழை காரணமாக இடிந்து விழும் ஆபத்தான சூழ்நிலைக்கு சென்றது ரசிகர்களின் இந்த பிரமாண்ட முயற்சி.

தொடர்ந்து ரசிகர்களின் நடமாட்டம் அப்பகுதியில் இருந்து வந்த காரணத்தினால், விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்செரிக்கையாக பிரமாண்ட கட்டவுட் ஆனது அங்கிருந்து அவசர அவரசமாக அகற்றப்பட்டு உள்ளது.