Breaking News

இது பிரியாணிக்கு சேர்ந்த கூட்டம் இல்ல...! அரசியல்வாதிகளை மிரள வைத்த விஜய் ரசிகர்கள்...!


தளபதி விஜயின் சர்கார் இசைவெளியீட்டு விழா பேச்சே, பல அரசியல்வாதிகளை கதிகலங்க வைத்திருந்த நிலையில், தற்பொழுது அவரது ரசிகர்கள் செய்த செயல் ஒன்றும் அவரது  அரசியல் பலத்தை காட்டி இருக்கிறது.

தீபாவளிக்கு மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளிவர இருக்கும் பிரமாண்ட திரைப்படம் சர்கார். இதனை பிரமாண்டமாக வரவேற்கும் விதத்தில் இந்திய திரையுலகிலேயே முதன் முறையாக 175 அடி கடவுட் ஒன்றினை வைத்து மாஸ் காட்டி இருந்தனர் கேரளாவின் கொல்லம் பகுதியை சேர்ந்த விஜய் ரசிகர்கள்.


இந்த பிரமாண்டத்தை விட அடுத்து நடந்தது தான் ஹைலைட், அந்த கட்அவுட் திறப்பு விழாவிற்கு, சமூக வலைதளங்களில் ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் எவருமே எதிர்பார்க்காத வகையில், நேற்று மாலை 5மணி அளவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு கூடி பிரமிக்க வைத்தனர்.

அந்த இடமே ஒரு அரசியல் மாநாடு போல பிரமாண்டமாக காட்சி அளித்த நிலையில், 'விஜய் அழைக்காத கட்அவுட் திறப்பு விழாவுக்கே இவ்வளவு கூட்டம்னா, அவர் அரசியலுக்கு வந்துவிட்டால் என்னாகுமோ..?' என வெள்ளை வேட்டிகளை முனு முனுக்க வைத்திருக்கிறது.