Breaking News

தமிழக ரசிகர்களை மிஞ்சி மாஸ் காட்டிய கேரள விஜய் ரசிகர்கள்...! பிரமாண்டாமோ பிரமாண்டம்..!


நடிகர் விஜய்க்கு தமிழகத்திற்கு இணையாக எக்கச்சக்க ரசிகர்கள் கேரளாவிலும் உள்ளனர். மலையாள திரையுலக சூப்பர் ஸ்டார்களுக்கு இணையாக தளபதி விஜயின் படங்களும் அங்கே கொண்டாடப்படுவது உண்டு.

இந்நிலையில் வருகிற தீபாவளிக்கு வெளியாக இருக்கும் சர்கார் திரைப்படத்தினை பிரமாண்டமாக வரவேற்கும் பொருட்டு இந்திய சினிமாவிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு பிரமாண்ட கட் அவுட் ஒன்றினை நிறுவ இருக்கின்றனர் கேரளாவின் கொள்ளம் பகுதியை சேர்ந்த விஜய் ரசிகர்கள்.

குறிப்பிட்ட கட் அவுட் ஆனது  சுமார் 175 அடியில் உருவாகி வருகிறது. இன்று மாலை 5.30 மணி அளவில் திறந்து வைக்கப்பட இருக்கும் இது, இந்திய சினிமாவிலேயே எந்த ஒரு நடிகருக்கும் கிடைத்திடாத ஒரு பிரமாண்ட பரிசாக இருக்கும் என 'கொள்ளம் நண்பன்ஸ்' விஜய் ரசிகர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.


கேரள விஜய் ரசிகர்களின் இந்த செயலை தமிழக விஜய் ரசிகர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.