Tuesday, 13 November 2018

"வாய்ப்பெல்லாம் வருது, நான் தான் நடிக்கலை"...! மார்க்கெட் போயும் சீன் போடும் நடிகை


திரைத்துறையில் உள்ளவர்கள் தன்னை பற்றிய கிசு கிசுக்களை கூட ஒத்துக்கொள்வார்ள் ஆனால் படவாய்ப்புகள் இல்லாமல் இருப்பதை ஒரு போதும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். இந்த வகையில் மார்க்கெட் சுத்தமாக போயும் வேண்டாத வெட்டிப் பந்தா காட்டி வருகிறார் கொழுக் மொழுக் நடிகை ஒருவர்.

90களின் பிரபல நடிகையின் மறு உருவமாக பார்க்கப்பட்டவர் இந்த நடிகை. அறிமுகமான சில ஆண்டுகளில் பெரிய பெரிய நாயகர்களுடன் நடித்து மார்க்கெட்டின் உச்சம் தொட்ட இவர், தற்பொழுது சிறு சிறு நடிகர்களுடன் நாயகியாக நடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

எப்படியாவது சினிமாவில் விட்ட இடத்தை பிடித்து விட வேண்டும் என, விடாப்பிடியாக இருக்கும் அவரிடம், 'ஏன் உங்கள் திரைப்படங்கள் ஏதும் முன்பு போல அடிக்கடி வெளிவரவில்லை?' என கேட்டால் , 'வாய்ப்புகள் ஏராளமாக வருகிறது ஆனால் நான்தான், நடித்தால் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே நடிப்பேன்' என மறுத்துவிட்டதாக சப்பை கட்டு கட்டுகிறாராம்.  
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();