Saturday, 3 November 2018

இது நியாயமே இல்ல... டிவி சேனலால் கதறும் திரிஷா...!


திரிஷா, விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து ஒரு மாதத்தை கடந்தும் வெற்றிப் படமாக ஓடிக்கொண்டிருக்கிறது '96' திரைப்படம். இந்நிலையில் வருகிற தீபாவளிக்கு இந்த திரைப்படத்தை வெளியிடுவதாக கூறிய பிரபல டிவி சேனலுக்கு நடிகை திரிஷா வேண்டுகோள் ஒன்றை வைத்திருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'மாபெரும் வெற்றிப் படமான '96' இன்னமும் 80% பாரவையாலர்களோடு அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அதற்குள் இந்த திரைப்படத்தை டிவி சேனலில் ஒளிபரப்புவது நியாயமில்லை. தயவு செய்து பொங்கலுக்கு அதன் ஒளிபரப்பை ஒத்தி வையுங்கள். இது எங்கள் பணிவான வேண்டுகோள்' என தெரிவித்து (கதறி) இருக்கிறார்.


திரிஷாவின் இந்த வேண்டுகோளுக்கு, ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், சாட்டிலைட் ரைட்சை வாங்கிய அவர்களுக்கு எப்பொழுதும் ஒளிபரப்ப உரிமை உள்ளது என சட்டம் பேசியும் வருகின்றனர் ஒரு தரப்பினர்.

சர்கார் வருது வழிய விடுங்க என்றான்... சூரிய தொலைக்காட்சி காரன்...! 






Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();