Breaking News

ஹாலிவுட் பாணியில் உருவாகும் "தல 59"...! ஆனாலும் அதிருப்தியில் ரசிகர்கள்


விஸ்வாசம் திரைப்படதினை தொடர்ந்து அஜித், தீரன் அதிகாரம் ஒன்று திரைப்பட புகழ் வினோத்தின் இயக்கத்தில் நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதிபடுத்தப்பட்டு விட்டது. இந்நிலையில் இத்திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்றும் தற்பொழுது வெளிவந்துள்ளது.

ஸ்ரீ தேவியின் கணவர் போனிகப்பூர் தயாரிக்க, அமிதாப் பட்சன் நடித்த 'பிங்க்' திரைப்படத்தின் நடிக்க இருக்கிறார் தல அஜித். இதற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், பில்லா போன்று பாடல்கள் படு மாஸாக இருக்கும் என கொண்டாடினர் அஜித் ரசிகர்கள்.

ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதத்தில், இந்த திரைப்படத்திலோ, ஒரிஜினல் வெர்சனான பிங்க் திரைப்படத்தினை போன்று பாடல்களே இருக்காது என குண்டை தூக்கி போட்டிருக்கிறது படக்குழுவிற்கு நெருங்கிய வட்டாரங்கள்.  


என்றாலும் சால்ட் அண்ட் பெப்பர் லுக், நோ சாங்க்ஸ் என ஹாலிவுட் ரேஞ்சுக்கு படம் இருக்கும் எனக் கூறி மனதை தேத்திக்கொண்டுள்ளனர் ரசிகர்கள்.