Breaking News

ரிலீசுக்கு முன்பே திருட்டு தனமாக வெளியான விஜயின் திரைப்படம்..! படக்குழுவினர் அதிர்ச்சி


ஆன்லைன் பைரஸி எனும் ஒரு விஷயம் திரையுலகினரின் மிகப்பெரிய தலைவலியாக இருந்து வருகிறது. படம் வெளியான முதல் நாளே அப்படத்தின் HD தர பிரிண்ட்டினை இணையத்தில் வெளியிட்டு வந்த இந்த கும்பல் இப்பொழுது பட ரிலீசுக்கு முன்பே திரைப்படங்களை லீக் செய்ய துவங்கி இருக்கின்றன.

இப்படியொரு இக்கட்டான சூழ்நிலையை பல சிறு சிறு திரைப்படங்கள் சந்தித்து வந்த நிலையில் தற்பொழுது பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவர கொண்டா நடித்த திரைப்படம் ஒன்றும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம், தமிழில்; நோட்டா ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. இவரது நடிப்பில் "டாக்ஸிவாலா" எனும் திரைப்படம் வருகிற நவரம்பர் 17ம் தேதி திரைக்கு வர இருந்தது. 

இந்நிலையில் அப்படத்தின் எடிட் செய்யப்படாத மூன்று மணிநேர படப்பிடிப்பு வீடியோவானது பைரஸி இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.



இது குறித்து வெளிப்படையாகவே தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்த நடிகர் விஜய், இப்படத்தில் பணியாற்றிய அனைவரது எதிர்காலமும் பைரஸி கும்பலால் கேள்விக்குறியாகி இருக்கிறது. தயவு செய்து ரசிகர்கள் அனைவரும் படத்தை திரையரங்குகளில் பாருங்கள்' எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதுபோன்று ரிலீசுக்கு முன்னதாகவே வெளியான திரைப்படங்களை திரையரங்கங்கள் வாங்க மறுத்து திரையிடப்படாமலே சென்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், டாக்ஸிவாலா திரைப்படத்தின் வெற்றி விஜய் சொன்னதை போல ரசிகர்களின் கையில்தான் இருக்கிறது.