Breaking News

மூன்று வேடம்..! மும்மடங்கு அதிரடி..! அசரவைக்கும் சூர்யா 37..?


சூர்யா நடிக்கும் இயக்குனர் K.V. ஆனந்தின் திரைப்படத்தில் மூன்று வேடங்களில் கலக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா தற்பொழுது செல்வராகவனின் NGK மற்றும் K.V. ஆனந்தின் பெயர் வைக்கப்படாத திரைப்படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

NGK தாமதம் மேல் தாமதமாகி வரும் நிலையில், K.V. ஆனந்தின் திரைப்படத்தில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார் சூர்யா. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பகுதி புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், அவற்றில் சூர்யா மூன்று கெட்டப்களில் இருப்பதை பார்க்க முடிகிறது.

தாடி வைத்த ஸ்டைலிசான கெட்டப், ராணுவ வீரர் கெட்டப் மற்றும் முரட்டுத்தனமான கிராமத்து இளைஞன் கெட்டப் என மூன்று வித்யாசமான கெட்டப்களில் அவர் இருப்பதால், இந்த திரைப்படத்தில் அவருக்கு மூன்று வேடங்கள் இருக்கலாம் என பேசப்பட்டு வருகிறது.

இது இன்னும் உறுதிப் படுத்தபடாத நிலையில், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை விரைவில் எதிர்பார்க்கலாம் என்கிறது சினிமா வட்டாரங்கள்.