சர்கார் சர்ச்சைக்கு சன்பிக்ச்சர்ஸ் கொடுத்த பதிலடி..! அலறும் 'அதிமுக'
சர்கார் திரைப்படத்தில் ஆளும் கட்சியான 'அதிமுக'வை இழிவு படுத்துவது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு தியேட்டர்களில் சர்கார் திரைப்படத்தை ஒளிபரப்புவதற்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளது.
மேலும் பிரச்சனைகள் எழாமல் இருக்க சர்ச்சை காட்சிகளை நீக்குவதாக சர்கார் படக்குழு ஒப்புக்கொண்டுள்ளது. இதனால் நடிகர் விஜய்க்கும், சனிபிக்சர்ஸ் நிறுவனத்துக்கும் எதிராக வெற்றியடைந்து விட்டதாக மகிழ்ச்சியில் உள்ளனர் அதிமுக வினர்.
இந்நிலையில் தான் சன் குழுமத்தின் செய்தி சேனல் ஒன்றில், ஜெயலலிதா மர்ம மரணத்தை விளக்கும் புலன் விசாரணை நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கும் அறிவிப்பானது வெளியாகி இருக்கிறது.
ஜெயலலிதா எப்படி மரணம் அடைந்தார், அதன் பின்னால் இருக்கும் இதுவரை வெளிவராத ரகசியங்கள் என அதிமுக வினருக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் ஜெயலலிதா மரணத்தை விளக்கும் புலன் விசாரணை நிகழ்ச்சியை கையில் எடுத்து இருக்கிறது அந்நிறுவனம்.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம்! இதுவரை வெளிவராத அதிரவைக்கும் உண்மைகள்— Sun News (@sunnewstamil) November 9, 2018
"புலன் விசாரனை"
நாளை மற்றும் ஞாயிறு இரவு 9 மணிக்கு உங்கள் சன் நியூஸ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள் #SunNews #Jayalalitha pic.twitter.com/wrVASJ7n2p