Breaking News

செல்ஃபி விவகாரம்..! பாதிக்கப்பட்ட இளைஞருக்கு சிவக்குமார் செய்த உதவி


மதுரை கருத்தரிப்பு மைய திறப்பு விழாவில், செல்பி எடுக்கவந்த ரசிகரிடம்  நடிகர் சிவக்குமார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டது, இத்தனை வருட திரையுலக வாழ்கையில் அவர் கட்டிக் காத்து வைத்திருந்த மரியாதையை எல்லாம், ஒரே நொடியில் காணமல் போக செய்தது.

'ரசிகர் செய்தது தவறே என்றாலும் எப்படி செல்போனை தட்டிவிடலாம்' என பலர் சிவக்குமாரை வாட்டி வதைத்து வந்த நிலையில், தானாக வழிக்கு வந்து மன்னிப்பு வீடியோ ஒன்றினையும் வெளியிட்டிருந்தார்.

அதற்கும் 'இப்படி வீடியோ வெளியிட்டால் மட்டும் போதுமா?, நீங்கள் உடைத்த செல்போனுக்கு என்ன பதில்?' என தொடர்ந்து விமர்சனங்களை பறக்க விட்டு வந்தனர் ரசிகர்கள்.

இந்நிலையில் வேறு வழியில்லாமல் நடிகர் சிவக்குமார் அந்த இளைஞருக்கு புது மொபைல் போன் வாங்கி தருவதாக வாக்குறுதி அளித்திருக்கும் தகவல்கள் வெளிவந்துள்ளது.


இது குறித்து டிவி சேனல் ஒன்றில் பேசிய பாதிக்கப்பட்ட இளைஞர், அவர் செல்போனை தட்டி விட்டு உடைந்ததும் மிகுந்த வேதனை அளித்தது. அத்தனைக்கும் அது என் சகோதரருடைய செல்போன், விலை 19,000 ரூபாய். சிவக்குமார் அவர்கள் புதிய போன் வாங்கி தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார் அதனால் மகிழ்ச்சிதான்' என்றிருந்தார்.