Breaking News

விஜய் அரசியலுக்கு வந்தால் என் ஆதரவு அவருக்குதான்...! தூண்டிவிட்ட கட்டப்பாவின் மகன்


ரஜினி, கமலை தொடர்ந்து நடிகர் விஜயும் அரசியலில் களம் இறங்குவார் என பரபப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், விஜயின் அரசியல் வருகைக்கு இப்பொழுதே ஆதரவு தெரிவித்து இருக்கிறார் நடிகர் சிபி ராஜ்.

பிரபலங்களின் மத்தியில் நடிகர் விஜய்க்கு இருக்கும் ரசிகர்களுள் சிபி ராஜும் ஒருவர். அவ்வப்போது அவரை புகழ்ந்து பதிவிட்டு வரும் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து பேசி இருக்கிறார்.

அதில், 'நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக எனது ஆதரவு அவருக்குதான்' என சிபி தெரிவித்திருக்கும் கருத்தானது சமூக வலைதளங்களில் சுற்றி திரிகிறது.


தற்பொழுது செம பீக்கில் இருக்கும் நடிகராக விஜய் வலம்வந்து கொண்டிருக்கும் நிலையில், அரசியல் களம்காண குறைந்தது பத்து வருடங்களாவது அவர் எடுத்துக்கொள்வார் என்கிறது விஜய் தரப்பு.

இப்படி இருக்க பலவேறு பிரபலங்களும் விஜயின் அரசியல் பிரவேசத்தை வரவேற்று பேசியிருப்பதால், விரைவில் அரசியலுக்கு வரும் முடிவை அவர் எடுத்து விடக்கூடாது எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர் அரசியல் ஆலோசகர்கள்.