Breaking News

அதிமுக'வின் தயவில் தெலுங்கிலும் வசூலை குவிக்கும் சர்கார்..!


A.R. முருகதாஸ் இயக்கத்தில், சன்பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியான திரைப்படம் சர்கார். அரசியல் அதிரடி திரைப்படமான சர்காரில் இடம் பெற்ற ஒரு சில காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தி, ஆளும் கட்சியான அதிமுக கொந்தளித்ததெல்லாம் நாம் அறிந்த சங்கதி.

அவர்கள் நடத்திய போராட்டமானது சர்காருக்கு உபத்திரமாக இருந்ததோ இல்லையோ, விளம்பர ரீதியில் நல்ல உபயோகமாகஅமைந்திருக்கிறது. அப்படியே விட்டால் தமிழகத்தை தாண்டிராத இந்த பிரச்சனையை இந்திய அளவில் பேச செய்தது ஆளும் கட்சியின் போராட்டம்.

விளைவு; தமிழ்,மலையாளம் உள்ளிட்ட மொழிகள் தவிர பிற மொழிகளில் கேட்பாரற்று கிடந்த சர்கார் தற்பொழுது வரலாறு காணாத வசூலை குவிக்க துவங்கி இருக்கிறது.     

சர்க்கார் ரிலீசான முதல் நாளில் ஆந்திர மாநிலத்தில் சுமாராக இருந்த வசூலானது, அதிமுக போராட்டதிற்கு பின்பு நான்கு நாட்களில் 6 கோடி ரூபாய் எனும் அளவிற்கு பல மடங்கு அதிகரித்து இருக்கிறது.

இன்னமும் சர்கார் நோக்கி ஆந்திர சினிமா ரசிகர்கள் படையெடுத்து வரும் நிலையில், தமிழ் திரைப்படத்தில் சாதனை வசூலை விரைவில் எட்டும் என்கின்றனர் திரையுலகினர்.

சாதா சர்காரா இருந்த என்னை சூப்பர் ஹிட் சர்கார் ஆக்குனது இவங்கதான்...! தேங்ஸ் டு அதிமுக...!