Friday, 9 November 2018

வலுக்கும் எதிர்ப்புகள் சரண்டர் ஆன சர்கார்..! முக்கிய காட்சிகள் நீக்கம்


சர்கார் திரைப்படத்தில் முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களையும், அதிமுக அரசின் இலவச சேவைகளையும் இழிவுபடுத்தும் விதத்தில் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக கூறி தமிழகம் முழுதும் பல்வேறு திரையரங்குகள் முன் 'அதிமுக'வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டமானது மேலும் வலுவடைந்து இருக்கும் நிலையில், சர்கார் திரைப்பட காட்சிகள் பல்வேறு தியேட்டர்களில் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் பிரச்சனை மேலும் பெரிதாவதை விரும்பாத அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ், 'அதிமுக'வினர் வலியுறுத்தியதை போல சர்ச்சை காட்சிகளை கத்தரிக்க ஒப்புக்கொண்டு உள்ளது.



இதற்கான மறு சென்சார் இன்று காலை 10மணி அளவில் நடைபெற்றது. அதில் ஒருவிரல் புரட்சி பாடலில் இடம் பெற்ற அரசின் இலவச பொருட்களை எரிக்கும் காட்சி, மற்றும் வில்லி வரலக்ஸ்மிக்கு ஜெயலலிதா அவர்களின் கோமளவல்லி எனும் இயற்பெயரை சூட்டி இருந்தது உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட சர்ச்சை காட்சிகள் கத்தரிக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.

சர்கார் திரைப்படத்தின் பலமே அந்த அரசியல் விமர்சன காட்சிகள்தான் என்ற நிலையில், அவை வலுக்கட்டாயமாக நீக்கப்பட்டு இருப்பது அப்படத்தின் சுவாரஸ்யத்தை பாதியாக குறைத்துவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 


Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();