Breaking News

விஜய்க்காக, விஜய் சேதுபதியை போட்டுத்தாக்கிய சன்பிக்சர்ஸ்...! இங்கேயும் அரசியலா...?


வருது வருது சர்கார் வருது, சிறு வண்டுகள் எல்லாம் தெறித்து ஓடுங்க என வெளிப்படையாகவே தியேட்டர்களை கைப்பற்றி சிறிய படங்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது அதன் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்.

'சர்கார் வேண்டாம் எங்களுக்கு கட்டுப்படியாகாது 96 படத்தையே நாங்க ஓட்டிகுறோம்' என விலகி செல்லும் தியேட்டர்களுக்கும் நூதன முறையில் செக் வைத்திருக்கிறது அந்நிறுவனம்.

பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும், விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளிவந்த காதல் திரைப்படமான '96' ஒரு மாதம் கடந்தும், அரங்கம் நிறைந்த காட்சிகளாகவே ஓடிக்கொண்டு இருக்கிறது.

இப்படியொரு சூழ்நிலையில், 'திரைக்கு வந்து ஒரு மாதமே ஆன புத்தம் புதிய திரைப்படம்' என்ற கனத்த குரலில், தீபாவளிக்கு 96 திரைப்பட ஒளிபரப்பை அறிவித்து இருக்கிறது சர்கார் தயாரிப்பு குழுமத்தின் சன் தொலைகாட்சி.

இதனால் '96' நாயகி திரிஷாவும், 'இது நியாயம் இல்லை பொங்கலுக்கு எங்கள் படத்தை போடுங்க' என பொங்கி இருக்கிறார்.

 இத்தனைக்கும் 50 நாட்களை கடந்து தியேட்டர்களில் இருந்து முற்றிலும் நீக்கப்பட்டு விட்ட, சீமராஜா திரைப்படத்தின் உரிமமும் அவர்களிடம் உள்ளதுதான் ஹைலைட்.

இருப்பினும், 'நாங்க '96'அ தான் ஒளிபரப்புவோம்' என அவர்கள் அடம் பிடிப்பது, தீபாவளிக்கு வெளிவரும் சர்காருக்கு கிடைக்கும் தியேட்டர் எண்ணிக்கையை அதிகரிக்கவே என இதன் பின்னால் இருக்கும் திரைப்பட அரசியலை புட்டு வைத்திருக்கிறார் ரசிகர் ஒருவர்.


இங்கேயும் அரசியலா.... இப்ப தெரியுதா ஏன் அவங்கள அசைக்க முடியலனு..!